Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் நூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு

நூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு

சட்ட வைப்பு

1973 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சுவடிகள் காப்பக சட்டத்தின் 21வது பிரிவின் பிரகாரம் "ரெஜிஸ்ரார்" என்ற பெயரில்  நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் இப்பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கின்றார். இதன் பிரகாரம் இப்பிரிவு நாட்டில் வெளியிடப்படுகின்ற செய்தித்தாள்களையும் வெளியீடுகளையும் தொகுத்து வைத்துக்கொள்ளும் பொறுப்பை வகிக்கிறது. இந்த விடயத்தின் கீழ் பின்வரும் செய்தித்தாள்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரிவு "சட்டரீதியான வைப்பு பிரிவு" என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக பத்திரிகைகளை பேரேட்டில் பதிதல், பத்திரிகை பட்டியல்களைக் காலத்திருத்தம் செய்தல் மற்றும் அவற்றை அச்சிடுதல் அத்துடன் ஏனைய பத்திரிகைகள் சார்ந்த பணிகள், புத்தக நிலையங்களைப் பரிசோதித்தல், புத்தக பட்டியல்களைக் கணனியில் பதிததல், மாத வெளியீடுகளைப் பதிவுசெய்தல், வார சஞ்சிகைகளையும் வர்த்தமானிகளையும் சூசிகைசெய்தல் போன்றவையும் நிறைவேற்றப்படுகின்றன.

அச்சக மற்றும் வெளியீட்டாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு வெளியீட்டின் ஐந்து பிரதிகள் குறித்த மாதிரி படிவத்துடன் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்துக்கு அனுப்பப்படல் வேண்டும். அச்சக உரிமையாளர்கள் தேசிய சுவடிகள் காப்பக திணைக்கத்தில் பதிவுசெய்திருத்தல் வேண்டும். அதற்கான பிரிவு மாதிரி படிவங்களை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பிரதிகளில் ஒவ்வொரு பிரதி வீதம் தேசிய நூலக சுவடிகள் நிலையத்துக்கு, தேசிய அரும்பொருட்காட்சியக நூலகத்துக்கு, பேராதெனிய பல்கலைக்கழக் நூலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

அச்சகங்களைப் பதிவுசெய்தலும் அச்சக நிர்வாகமும்.

இவ்விடயத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் யாதெனில், அச்சகங்களைப் பதிவுசெய்தல், அச்சகங்கள் மூடப்படுவதைக் குறித்துக்கொள்தல், அச்சகங்களைப் பரிசோதித்தல், அச்சக பட்டியல்களைக் காலத்திருத்தம்செய்தல் மற்றும் பட்டியலை அச்சிடுதல், அச்சகம் சார்ந்த சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்றவையாகும். (அச்சகங்கள் சார்ந்த இக்கடமைகள் அச்சக கட்டளைச் சட்டம் மற்றும் அச்சிடல் மற்றும் வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நிறைவேற்றப்படுகிறது.)

அச்சக கட்டளைச் சட்டம் மற்றும் அச்சு மற்றும் வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம் அச்சகம்

  • அச்சக கட்டளைச் சட்டம் - 1902 இலக்கம் 16
  • அச்சக (திருத்தச்) சட்டம் - 1951 இலக்கம் 20
  • அச்சக (திருத்தச்) சட்டம் - 1955 இலக்கம் 22
  • அச்சக (திருத்தச்) சட்டம் - 1983 இலக்கம் 26

  • அச்சு கலைஞர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் - 1885 இலக்கம் 01
  • அச்சு கலைஞர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தொடர்பான (திருத்தச்) சட்டம் - 1951 இலக்கம் 28
  • அச்சு கலைஞர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் - 1976 இலக்கம் 06
  • அச்சு கலைஞர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் - 1983 இலக்கம் 27

  • செய்தித்தாள் கட்டளைச் சட்டம் - 1839 இலக்கம் 05
  • செய்தித்தாள் (திருத்தச்) சட்டம் - 1951 இலக்கம் 18
  • செய்தித்தாள் (திருத்தச்) சட்டம் - 1976 இலக்கம் 05

புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய விண்ணப்ப படிவங்கள்

மாத வெளியீட்டு பத்திரம் (வெளியீடொன்று வெளியிடப்பட்டு ஒரு மாதம் கடந்ததன் பின்னர், அடுத்து வரும் மாதத்தின் 05 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும். ஏதேனும் ஒரு மாதத்தில் வெளியீடொன்று வெளியிடப்படாவிட்டாலும், வெளியீடு அச்சிடப்படவில்லை என அறிவித்து வெளியீட்டு பத்திரத்தை அனுப்ப வேண்டும்.)

Last Updated on Friday, 08 July 2016 09:27  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.