தொலைநோக்கு
கலாசார சொத்தின் ஒருபகுதியாக அரச சுவடிகளை ஒழுங்குமுறையாக முகாமைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்
செயற்பணி
1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நடைமுறைப்படுத்துதல், நிரந்தரமாகப் பாதுகாத்துவைப்பதற்கு அரச ஆவணங்களையும் தனிச்சிறப்புவாய்ந்த ஆவணங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுதல், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அரச ஆவணங்களை முகாமைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்து வைத்துக்கொள்ளுதல், குறித்த சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்டரீதியாக சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களையும் வெளியீடுகளையும் திரட்டுதல், பொதுநிருவாக செயற்பாட்டின்போதும் பொதுமக்களின் ஆய்வுகளுக்கும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களிலிருந்து தகவல்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வசதிகளைச் செய்துகொடுத்தல்.
நோக்கமும் பணிகளும்
1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தின் பிரகாரமும் 1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக (திருத்தச் சட்த்தின்) பிரகாரமும் நோக்கங்களும் பணிகளும்.
- அரச சுவடிகளின் பொறுப்பை வகித்தலும் அவற்றின் பௌதிக நிலையைப் பாதுகாத்தலும்.
- ஆய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல்.
- அரச நிறுவணங்களின் சுவடிகளை ஆய்வுசெய்தல்
- சனாதிபதியின் சுவடிகள் காப்பகத்தை நிர்வகித்தல் மற்றும் தகவல் குறிப்புகளை வழங்கும் சேவை.
- இந்நாட்டில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்கள் என்பவற்றின் சட்டரீதியான வைப்புகளின் களஞ்சியமாக செயலாற்றுதல்.
- தனிப்பட்ட சுவடிகளை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பெயர்ப்பட்டியல்படுத்தல்
- அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் சுவடிகள் பாதுகாப்புக்கு உதவுதல்.
- வணக்கஸ்தலங்களின் சுவடிகளைப் பாதுகாத்தல்.
- சுவடிகள் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல்
- அச்சகங்கள், அச்சிடுவோர், வெளியிடுவோர், மற்றும் செய்தித்தாள்கள் தொடர்பான கட்டளைச் சட்டங்களை அமுலாக்குதல்.