- ஆய்வுகூடம்
- புத்தகம் கட்டும் பிரிவு
- புனரமைப்பு பிரிவு
- புத்தகம் கட்டுனர்களுக்கு பயிற்சியளிக்கும் பிரிவு
- பூர்த்திசெய்யும் பிரிவு
- வெளிநாட்டு கருத்திட்ட பிரிவு
தொழில்நுட்ப பிரிவின் பணிகள்
- திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளை பாதுகாத்தலும் புனரமைத்தலும்
- புத்தகங்கள்/ பதிவேடுகள்/ செய்தித்தாள்கள்/ ஏட்டு சுவடிகள்/ வரைபடங்கள்/ வர்ண சறுக்கும் நிழல் படங்கள்/ கறுப்பு வெள்ளை படங்கள்/ ஓவியங்கள்/ செவிப்புல கட்புல பதிவேடுகள்.
- பேணிக்காப்பதற்கான பசைகளைத் தயாரித்தல்
- பதிவேடுகளைப் பேணிக்காப்பதற்காகப் பயன்படுத்துகின்ற கடதாசி/ கிருமி நாசினி வகைகள்/ ஒட்டக்கூடிய பொருட்கள் (பசை) போன்றவை தொடர்பில் விஞ்ஞானரீதியான பகுப்பாய்வுகளை மேற்கொள்தல்.
- கிருமிகள், பங்கஸ் தொல்லைகளுகளுக்குள்ளான பதிவேடுகளுக்கு புகையூட்டல்
- கடதாசிகளின் தரம் தொடர்பாக தர பரிசோதனை செய்து அறிக்கை தயாரித்தல்
- திணைக்களத்தில் உள்ள களஞ்சியத்தில் சூழல் நிலையைப் பரிசோதித்தல், அறிக்கைகளை வழங்குதல் மற்றும் சிக்கல்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
- நாடு முழுவதிலும் உள்ள வணக்கஸ்தலங்கள் வசமுள்ள ஏட்டுச் சுவடிகளையும் கையேடுகளையும் ஆய்வுசெய்தல் மற்றும் பேணிக்காத்தல்.
- ஏனைய நிறுவனங்களுக்காக புத்தகம் கட்டுநர்களை ஆட்சேர்ப்புச்செய்யும் பரீட்சைகளையும் வினைத்திறன் தடைகாண் பரீட்சைகளையும் நடாத்துதல் மற்றும் அவ்வினாத்தாள்களைத் தயாரித்தல்.
- அரச அமைச்சுகள்/ திணைகக்ளங்கள்/ கூட்டுத்தாபனஙங்கள்/ சபைகள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பவற்றுக்கு பதிவேடுகளை பேணிக்காத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல்.
- பதிவேடுகள் அறை/ பாடசாலை சுவடிகள் கூடம் அமைத்தல் மற்றும் அவற்றை நடாத்துதல் தொடர்பில் உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
தொழில்நுட்ப பிரிவு
ஆய்வுகூடம்
ஆய்வுகூடத்தின் பணிகள்
- PH பெறுமதியை அளந்தறிதல்
- பதிவேடுகளில் உள்ள கறைகளை அகற்றுதல்
- பதிவேடுகளில் அமில நீக்கம்
- கடதாசி தொடர்பான ஆய்வு
பயிற்சியளித்தல்
- புத்தகம் கட்டுதல்
அரச நிறுவனங்களில் புத்தகம் கட்டுகின்றவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 5 பயிற்சிநெறிகள் நடத்தப்படுகின்ற அதேவேளையில் காலம் 30 நாட்களாகும். பயிற்சி பெறுகின்ற புத்தகம் கட்டுனர்கள் சுமார் 30 பேர் கலந்துகொள்கின்றதோடு ஒரு பதிவேடுகள் புனரமைப்பு உத்தியோகத்தர் பயிற்சிகளை நடத்துவார்.
- ஆவணங்களைப் புனரமைத்தல்
நிறுவனமொன்றில் பதிவேடுகள் பேணிக்காத்தல் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடமிருந்து அது தொடர்பிலான அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதாகும்.
- ஏட்டுச் சுவடிகளைப் பேணிக்காத்தல்
வணக்கஸ்தலங்களில் பிக்கு மாணவர்கள் மற்றும் சுதேச மருத்துவர்களுக்காக நடைபெறும். திணைக்கள உத்தியோகத்தர்கள் உரிய இடங்களுக்குச் சென்று பயிற்சிகளை நடத்துவார்கள்.
![]() |
![]() |
![]() |