இற்றைப்படுத்தப்பட்ட தகவல் (2023.08.15): காப்பகங்கள் மற்றும் பதிவு முகாமைத்துவம் குறித்த தேசிய கொள்கை வரைவு மீதான சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை முடிவடைந்துள்ளது.
இற்றைப்படுத்தப்பட்ட தகவல் (2023.08.08): மக்களின் கோரிக்கையின் பேரில், எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக் கால எல்லை 14.08.2023 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
21.07.2023 நள்ளிரவு 12 மணி முதல் 07.08.2023 நள்ளிரவு 12 மணி வரை, சமர்ப்பிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
21.08.2023 (யாழ்ப்பாணம்), 22.08.2023 (கண்டி) மற்றும் 25.08.2023 (கொழும்பு) ஆகிய திகதிகளில் பொதுக் கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடைபெறும். எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்கியவர்களே அவற்றில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இணையவழிச் சமர்ப்பித்தல்:
https://forms.gle/eExB3e7dWGfKjeM77
பதிவிறக்கங்கள்
අධිලේඛන සහ වාර්තා කළමනාකරණය පිළිබඳ ජාතික ප්රතිපත්ති කෙටුම්පත_V1.2_ (PDF 919 KB)
காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவ தேசிய கொள்கை_V1.2_(PDF 554 KB)
Draft National Policy on Archives and Records Management_V1.2_(PDF 304 KB)
சமர்ப்பிப்புப் படிவம் (PDF 1321 KB)
அறிமுகம்
காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவத்துக்கான தேசியக் கொள்கை வரைவு மீதான பொது சமர்ப்பணங்களுக்கான அழைப்பை வெளியிடுவதில் தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் மகிழ்ச்சியடைகிறது. நமது வரலாற்றின் செழுமையான பக்கத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த அத்தியாவசியமான கொள்கையை வடிவமைப்பதற்காக, தங்கள் மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்களை நாங்கள் அழைக்கிறோம்.
காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவத்துக்கான தேசியக் கொள்கையானது, நமது தேசத்தின் காப்பகப் பதிவுகளின் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மையைத் தெரிவித்தல் மற்றும் வடிவமைத்துச் செயல்படுவதற்கான திசை மற்றும் பொருத்தமான கட்டமைப்பை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் நமது பகிரப்பட்ட வரலாற்றை அணுகவும் கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில், இது நமது கூட்டு நினைவினைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தழுவிக்கொள்கின்றது.
கவனம் குவிக்கப்படும் பிரதான தளங்கள்:
● அணுகல் மற்றும் பாதுகாத்தல்: காப்பகங்கள் மற்றும் பதிவுகளுக்கு பொது அணுகலை வழங்குதல், முக்கியமான தகவல்களைப் பாதுகாத்தல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் உள்ள பொருட்களின் நீண்ட ஆயுளை உறுதி செய்தல் என்பவற்றுக்கு இடையே நுட்பமான சமநிலையை ஏற்படுத்துகிறது.
● எண்ணிமப் பதிவுகள் முகாமைத்துவம்: எண்ணிமப் பதிவுகள் மற்றும் சொத்துக்களை திறம்பட நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உத்திகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல்.
● இணைந்தியங்கல் மற்றும் கூட்டுப்பங்குடைமை: காப்பக முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பங்காளர்களுடன் ஒத்துழைப்பை வளர்த்தல்
இந்தக் கொள்கையின் வெற்றியானது நமது பல்வேறு சமூகங்களின் கூட்டு அறிவில் தங்கியுள்ளது. எனவே, ஆய்வாளர்கள், காப்பக வல்லுநர்கள், பதிவு முகாமையாளர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளில் பதிவுசெய்தல் நடைமுறைகளில் ஆர்வமுள்ள மற்றும்/அல்லது பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களும் நமது நாட்டில் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் சார் நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த தனித்துவமான வாய்ப்பில் பங்கேற்க ஊக்குவிக்கிறோம்.
எவ்வாறு பங்கேற்பது:
இந்த முக்கியமான கொள்கையை வடிவமைப்பதில் பங்களிப்பதற்காக, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் வரைவுக் கொள்கையைப் பதிவிறக்கம் செய்து, இணையவழிப் படிவம் அல்லது சமர்ப்பிப்பு வடிவத்தின் கடின நகல் மூலம் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம் (மேலே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்). கொழும்பில் உள்ள எங்கள் தலைமை அலுவலகம் அல்லது கண்டியில் உள்ள கிளை அலுவலகத்திற்கு வருகையளித்து, அதன் அச்சிடப்பட்ட பிரதியை பெற்றுக்கொள்ளலாம். 21.08.2023 (யாழ்ப்பாணம்), 22.08.2023 (கண்டி) மற்றும் 25.08.2023 (கொழும்பு) ஆகிய திகதிகளில் பொதுக் கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடைபெறும். எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்கியவர்களே அவற்றில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கொள்கை உருவாக்கத்தின் போது அனைத்து சமர்ப்பிப்புகளும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று தேசிய ஆவணக் காப்பகம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.