தேசிய சுவடிகள் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவ சட்டக் கட்டமைப்பில் பொது மக்களின் கருத்துக்களுக்கான அழைப்பு

2024.02.14 ஆந் திகதி நள்ளிரவு முதல் 2024.02.29 ஆந் திகதி நள்ளிரவு வரை சமர்ப்பிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பதிவிறக்கம்

Framework for Framework for National Archives and Records Management Legislation (PDF 312 KB)

அறிமுகம்

தேசிய சுவடிகள் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவ சட்டக் கட்டமைப்பில் கருத்து வழங்குவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு விரிவான சட்டத்தை உருவாக்க உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் தேசிய சுவடிகள் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் முகாமைத்துவ சட்டக் கட்டமைப்பினை வரைவிடுவதற்காக பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

  1. திரு. நைஜல் நுகவெல, பிரதம சுவடிப்பாதுகாப்பு உத்தியோகத்தர் (தலைவர்)
  2. கலாநிதி நதீரா ரூபசிங்க, பணிப்பாளர் நாயகம், தேசிய சுவடிக்கூடம் (உறுப்பினர்)
  3. பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, முன்னாள் தலைவர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) (உறுப்பினர்)
  4. திரு. பியதிஸ்ஸ ரணசிங்க, முன்னாள் பணிப்பாளர் நாயகம், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு (உறுப்பினர்)
  5. திருமதி. யமுனா ரணவக, முன்னாள் பிரதி சட்ட வரைஞர் ( உறுப்பினர்)
  6. திரு. ரவீந்திர பிரியந்த லால், விரிவுரையாளர், ரத்மலானை பல்கலைக்கழகக் கல்லூரி,தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (உறுப்பினர்)
  7. திருமதி. ஷமிலா பிரியங்கனீ, தேசிய சுவடிகள் கூட உதவிப் பணிப்பாளர் ( இணைப்பாளர்)

பங்கேற்கும் விதம்

நீங்கள் அதை அஞ்சல் மூலமாகவோ, dgna@archives.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது இலக்கம் 07, பிலிப் குணவர்தன மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் உள்ள தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது எமது கிளை அலுவலகம் அமைந்துள்ள கண்டி ஹேமமாலி மாவத்தையின் இலக்கம் 4/6 என்ற முகவரிக்கோ வருகை தந்து ஒப்படைக்கலாம்.

தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் துல்லியமாக இருத்தல் வேண்டும் என்பதோடு, உமது விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக வாதங்களையும் முன்வைக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

வெளிப்படுத்தல் அறிக்கை

உங்கள் அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தரவு மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படாமல் இருப்பதை தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம்  உறுதி செய்யும். அத்தோடு நீங்கள் வழங்கும் தகவல் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

கலாநிதி நதீரா ரூபசிங்க,

பணிப்பாளர் நாயகம் தேசிய சுவடிக்கூடம்

தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம்

இலக்கம் 07, பிலிப் குணவர்தன மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.

2024.02.14

தொ.இல. 0112671042

 

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-05-29 09:58:09~ சேவையக நேரம்: 2024-07-01 21:21:17