இலங்கையின் வெளிநாட்ட்லுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான மான்புமிகு விஜித ஹேரத் அவர்கள் மற்றும் மாலைத்தீவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான மான்புமிகு இருதிஷாம் அடம் (Iruthisham Adam) அவர்களும் மே மாதம் 4ம் திகதியில் ஆவணக்காப்பக ஒத்துழைப்பு சார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒப்பமிட்டார்கள்.

இந்த ஒப்பந்தம் நட்புறவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் காப்பக ஆவணம் மற்றும் பதிவுகள் முகாமைத்துவம் மற்றும் ஆவண பேணுகை துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்தவும், ஆவண நிபுணத்துவத்தினை பகிர்ந்துகொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையில் நிலைபெறக்கூடிய ஆவண நடைமுறைகளைய ஊக்குவிக்கவும் முயல்கின்றது.

இரு நாடுகளும் அவற்றின் தேசிய ஆவணக் காப்பகங்களும் காப்பக ஆவணம் மற்றும் பதிவு முகாமைத்துவம் சார்ந்த தகவல்கள், மற்றும் துறைசார்ந்த சர்வதேச நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள்களின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதோடு ஒத்துழப்பினை வளர்ப்பதற்காக அந்த சர்வதேச நிகழ்ச்சிகளில் பிரதிநிதிகள் பங்குபற்ற ஊக்குவிக்கப்படுவார்கள்.

 பலதரப்பட்ட ஒத்துழைப்பினை எளிதாக்கும் பணியில் நிபுனர்கள், காப்பக ஆவணங்களின் பிரதிகள் மற்றும் மெட்டாடேட்டாவினை ப்ரிமாறிக்கொள்வதும் அடங்கும். மேலும், இரு நாடுகளின் தேசிய ஆவணக்காப்பகங்களும் இத்துறையில் கண்காட்சிகளின் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

 ஒத்துழைப்பினை மேலும் வளர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு நாட்டின் தேசிய ஆவணக்காப்பகமும் பரிமாற்றத் திட்டங்கள், கல்விச் சுற்றுப்பயணங்கள் மற்றும் காப்பக ஆவணம் மற்றும் பதிவுகள் முகாமைத்துவத் துறையில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலம் தங்களது மனிதவளத்தை மேம்படுத்தி, மேலதிக ஒத்துழைப்புக்கு உறுதிபூணும்.

வரும் தலைமுறைகளுக்காகத் தங்களது தேசிய ஆவணக்காப்பகங்களைப் பேணி பாதுகாக்கும் மதிப்புமிக்க முயற்சிகளில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கும் பயனளிக்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கருத்துகள் தொடர்பான நிபுணத்துவத்தையும் புதிய அறிவையும் பகிர்ந்துகொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால், இந்த ஒத்துழைப்பு புதிய தொழில்நுட்பங்களையும் அடங்கும்.

இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்தில், மாலத்தீவுகள் தொடர்பான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட எச். சி. பி. பெல்லின் (H.C.P Bell) பதிவேடுகள் உட்பட, மாலத்தீவுகளுக்குப் பயனுள்ள குறிப்பிடத்தக்க சேர்க்கைகள் உள்ளன.

மாலத்தீவின் மாண்புமிகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களும், இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி அனுர திசாநாயக்க அவர்களும், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படுவதை மேற்பார்வையிடுகின்றனர். பட ஆதாரம்: ஜனாதிபதி அலுவலகம், இலங்கை, 04.05.2026

முகப்பு

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2026-05-06 09:42:16 ~ சேவையக நேரம்: 2026-05-17 04:41:21