டொய்லி எனும் போர்த்திறம் வாய்ந்தவர்
1815 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் ஜோன் டொய்லி என்பவரால் வரையப்பட்டது. 1801 இல் இலங்கை சிவில் சேவையில் இணைந்த அவர்ää 1802 இல் கொழும்பு பிராந்திய நீதிமன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்;டார். பின்னர் 1803இல் மாத்தறை பிராந்திய நீதிமன்றத்தின் தலைவராகவும்ää 1084இல் மாத்தறை வருவாய் மற்றும் வர்த்தக் கட்டுப்பாட்டாளராகவும் பதவியுயர்வு பெற்றார்.
இக்காலத்தில் கரதொட தர்மராம தேரரிடம் சிங்கள மொழியையும் இலக்கியத்தையும் கற்கும் வாய்ப்பு டொய்லிக்கு கிடைத்தது. அவர் மொரதொட தம்மக்கந்த பிக்குகளுடன் மற்றும் பிற பிக்குகளுடனும் கல்வி தொடர்பான விவாதங்களை நடத்தினார். அத்தோடு மாத்தறைக் காலத்தின் புகழ்பெற்ற  கவிஞர்களான கஜமன் நோநாää எலபாத முதலி போன்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
அவரின் சிங்கள மொழிப் புலமை காரணமாகää 1805 இல் ஆளுநர் மெட்லன்ட்டினால் அரச தலைமை மொழிபெயர்ப்பாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். ஆளுநர் பிரவுன்ரிக்கினால் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில்ää அவரின் சிங்கள மொழிப் புலமைää கண்டிய பழக்கவழக்கங்கள்ää உள்நாட்டு சமூகம் தொடர்பில் நன்கு புரிந்தவராகவும் இருப்பதனால்ää கண்டிப் பிரதேசத்தின் நிர்வாகியாக நியமிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர் டொய்லியே எனத் தெரிவித்துள்ளார்.
கண்டிய மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் பிரிவினையை ஏற்படுத்த ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட உளவாளி டொய்லி ஆவார். பிலிமதலாவின் மகா அதிகாரிää எஹலேபொல மற்றும் மீகஸ்தென்னே அதிகாரிகளுடனும்ää புஸ்வேல்லேää எக்னெலிகொடää லெவிகே ஆகிய திசாவேவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். அவர் அந்த பிரபுக்களிடையே அரசாட்சி பற்றிய நம்பிக்கையையும்ää எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தி அவர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக அரச விவகாரங்களில் குழப்பத்தை உண்டுபண்ணும் விதத்தில் செயற்பட்டார்.தேசிய சுவடிகள் காப்பகம்ää 21ஃ35 தொகுதி. ஐ. ஆளுநர் பிரவுன்ரிக் ஜோன் டொய்லிக்கு அனுப்பிய 1815 மார்ச் மாதம் 2ஆந் திகதிய கடிதம்.

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-05 04:08:21