முதல் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் 1833
இலங்கையின் வருமானம்ää நிருவாகம் மற்றும் நீதிமன்ற முறைமை என்பன பற்றி ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட முதலாவது அரச விசாரணை ஆணைக்குழுவே கோல்புறூக் கெமரன் ஆணைக்குழுவாகும். 1829 ஆம் ஆண்டில் முழு நாட்டிற்கும் வந்த வில்லியம் மெகென்ஸிää ஜோஜ் கோல்புறூக் மற்றும் 1830 ஆம் ஆண்டில் வந்த சால்ஸ் ஹே கெமரன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். ஆளுநர் எட்வெட் பான்ஸ் என்பவர் இந்த ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  
அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்ட ஒரு வினாக்கொத்தின் மூலம் இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்த மனுக்களையும் மற்றும் அரச நிறுவனங்களிடம் உள்ள ஆவணங்களையும் பரிசீலித்து ஆணைக்குழு தகவல்களை பெற்றுக்கொண்டது.
ஒரு நிறைவேற்று சபையை தாபித்தல்ää சிங்களவர்ää தமிழர்ää பறங்கியர் என்ற உத்தியோகபூர்வமற்ற ஒரு பிரதிநிதித்துவம் அடங்கிய ஒரு அரசியலமைப்பு சபையை தாபித்தல்ää இலங்கையை ஐந்து பிரிவுகளாகப் பிரித்தல்ää சிவில் சேவையின் வேதனங்களை குறைத்தல்ää முழு நாட்டிற்கும் ஒரு நீதிமன்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் போன்றவை ஆணைக்குழுவின் முன்மொழிவுகளாக இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டமை முக்கியமான அம்சமாகும்.  
ஆணைக்குழுவினால்ää பயிர் நடவடிக்கைகள் பேணப்பட்ட விதம்ää சிரமம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் பற்றி காணி உரிமையாளர்களிடம் வினவியமை இந்த ஆவணங்களில் இருந்து பிரதிபலிக்கப்படுகின்றது. அது பற்றிய விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழுää பணி முறையை நீக்குவதற்கு முன்மொழிந்தது. தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம்இ 19ஃ3இ விவசாய வளங்கள் பற்றிய கோல்புறூக்-கெமரன் விசாரணை ஆணைக்குழுவினது அதிகாரிகளின் கேள்விளுக்கு கொழும்பிலும் அதை அண்மித்த மாவட்டங்களிலும் இருந்த பிரதானிகளும் மற்றும் உள்நாட்டு காணி உரிமையாளர்களும் அளித்த பதில்கள்.

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-09-09 14:17:30~ சேவையக நேரம்: 2024-11-02 22:09:19