வாக்களிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தல்
இலங்கையில் இரண்டாவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் 1910இன் க்ரூ மெக்கலம் சீர்திருத்தமாகும். இதன் மூலம் முதன்முறையாக சட்டவாக்கச் சபைக்கு படித்த இலங்கைப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிந்தது. இவ்வாறு தேர்தலினால் தெரிவு செய்யப்பட்ட முதல் பிரதிநிதி சேர் பென்னம்பலம் இராமநாதன் ஆவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கத்திய கல்வியறிவு பெற்ற இலங்கையர்கள் அரசியல் அமைப்புக்கள் மீது காட்டிய அக்கறை இந்த சீர்திருத்தங்களுக்கு பின்னணியை வழங்கியது.
1908இல் ஜேம்ஸ் பீரிஸ் ஆளுநரிடம் விஞ்ஞாபனம் சமர்ப்பித்து கொழும்பு மாநகர சபை அளவுக்குக் கூட பெரியதாக இல்லாத சிறிய தீவுகளுக்கு சட்டவாக்கச் சபைக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும்ää இந்தியாவிற்கு மோலி மிண்டோ சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டுள்ளதும்ää ஆனால் இலங்கைக்கு அவ்வாறானதொரு அந்தஸ்து வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச கட்டளைப் பத்திரம் மூலம் புதிய ஆட்சிமுறை 1910 நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டவாக்க சபை பதவிப்பெற்ற அங்கத்தவர்கள் 11 பேர்களினாலும் பதவிப்பெறாத அங்கத்தவர்கள் 10 பேர்களினாலும் அமையும். பதவிப்பெறாத அங்கத்தவர்களுள் 06 பேர் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டதுடன் நான்கு பேர் இனம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தேசிய நூதனசாலைஇ ஹன்சார்ட் சட்டவாக்கச் சபைக்கு தேர்தலினால் பிரதிநிதிகளை நியமித்தல் தொடர்பான கட்டளைச் சட்டம் குறித்த விவாதம்ää 1910 செப். 28.

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-05 04:19:44