இலங்கை குடியரசாக மாறுதல்
1970 ஜுலை மாதம் 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் புதிய கலைமண்டபத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள்ää புத்திஜீவிகள் உள்ளிட்ட சுமார் 1500 பேர்கள் திரு.ஸ்டென்லி திலகரத்ன அவர்களின் தலைமையில் அரசியலமைப்பு தயாரிப்பு சபையொன்று நியமிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பு 1972 மே மாதம் 22 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்;டது.
ஆரசியலமைப்பில் முதலாவது பந்தியின் மூலம் இலங்கை சுதந்திர இறையாண்மை கொண்ட சுயாதீனமான குடியரசொன்றாகவும், 2 ஆவது பந்தியின் மூலம் ஒருமித்த அரசாங்கமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் பதவிக்கு பதிலாக ஜனாதிபதி பதவி தாபிக்கப்பட்டதுடன் திரு.வில்லியம் கொபல்லவ அவர்கள் அதன்படி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மக்களின் இறைமை மற்றும் சட்டவாக்க அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய ரஜ்ய சபை ஒன்று மூலம் அமுல்படுத்தப்பட வேண்டுமென 4 மற்றும் 5 ஆவது பந்திகள் மூலம் பணிக்கப்பட்டுள்ளது.

லங்காவ என்று அழைக்கப்படுகின்ற நாமம் இலங்கை என மாற்றம் பெறுவது இந்த அரசியலமைப்பின் மூலமாகும்.
1972 இல் இலங்கை குடியரசாக மாறியதை முன்னிட்டு அரச இலச்சினை உருவாக்கப்பட்டது. சித்திரக் கலைஞர் திரு.எஸ்.எம்.செனவிரத்ன அவர்களால் அரச இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. அரச இலச்சினையின் உரித்துடைமை மற்றும் பயன்படுத்தும் உரிமை உரித்தாகுவது ஜனாதிபதி அவர்களுக்காகவும். அது அரச உத்தியோகப்பூர்வ முத்திரையாகும்.

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-09-09 14:17:30~ சேவையக நேரம்: 2024-11-29 11:04:27