சூரிய மள் இயக்கம்
சூரிய மள் இயக்கம் 1933 ஆம் ஆண்டில் ஆரம்பமான ஒரு இயக்கமாகும். அது ஒரு சமூக நலன்புரி இயக்கமாக தென்பட்டாலும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களைக்கொண்டதாக இருந்தது. இதனால் மக்கள் மத்தியில் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி அதிகார வர்க்கத்திற்கு எதிரான உணர்வுகள் தூண்டப்பட்டன. பிரித்தானியாவின் பொப்பி மள் இயக்கத்திற்கு எதிராக இலங்கையின் சூரிய மள் இயக்கம் பயன்படுத்தப்பட்டது.
வெளிநாட்டில் கல்வி கற்ற பின்னர் இந்த நாட்டிற்கு வந்த சமவுடமைவாத சிந்தனையில் அக்கறைகொண்ட இளைஞர்கள் குழு இந்த இயக்கத்தை ஆரம்பிக்க துணைபுரிந்தது. டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க, கலாநிதி என்.எம். பெரேராää உயர் சட்டத்தரனி லெஸ்லி குணவர்த்தன, கலாநிதி கொல்வின் ஆர். த சில்வாää டொரீன் விக்ரமசிங்க, சட்டத்தரனி வர்ணன் குணசேக்கர,சட்டத்தரனி பீ.ஜே. பெர்னாந்து, ஷெலீனா பெரேரா ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தனர். சங்கத்தின் ஆரம்ப தலைவராக டொரீன் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை ஒரு விஷேடத்துவமாகும். முதலாவது அரசியல் கட்சியான லங்கா கொமியுனிஸ்ட் கட்சியை அமைக்க இவர் முன்னிலை வகித்தார்.
இலங்கையில் தாழ்ந்த சாதியினரினது பிள்ளைகளின் கல்வியை கட்டியெழுப்பல், மலேரியா தொற்றுநோயில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் மற்றும் பின்தங்கிய தூரப் பிரதேசங்களுக்கு தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள் அடங்கலாக ஏனைய அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் இந்த இயக்கத்தின் நலன்புரி விடயங்களாக இருந்தன.
தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம், தொழிலாளர் குரல், 02.11.1934,  சூரிய மள் இயக்கம்

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-09-09 14:17:30~ சேவையக நேரம்: 2024-11-02 22:05:24