டொமினியன் அந்தஸ்து  
இலங்கைக்கு மகா ராஜ சபையின் கீழ் சுதந்திரம் வழங்குவதாக காலனித்துவ ஆட்சியின் செயலாளரினால் ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களுடன் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரித்தானிய அரசாங்கத்தினால் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  21 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர சட்டம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த ஆண்டு திசம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்திலும் அதிக வாக்குகளினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்டத்திற்கு திசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிரித்தானிய பேரரசரின் அனுமதியும் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.   
சுதந்திர இலங்கைக்கு ஒரு தேசிய கொடியை நிர்மாணிக்கும் தேவையின் பேரில் 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி தேசிய கொடியை நிர்மாணிக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரக்கநாயக்க அவர்களும், செயலாளராக செனரத் பரணவிதான அவர்களும் இருந்தனர். மேலும் ரீ.பீ. ஜாயா, லலித் ராஜபக்ஷ, ஜி.ஜி. பொன்னம்பழம், சுதேஷ் நடேசன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.  
இலங்கைக் கொடியை நிர்மாணிக்கும் குழுவினது அறிவுரைகளின்படி இறுதியாக இந்தத் தேசிய கொடி திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்திற்கு அமைய மொத்தமாக நான்கிலும் பீரெலு நான்குக்கு பதிலாக போபத் நான்கு சேர்க்கப்பட்டன. அவற்றின் மூலம் மெத்தாää கருனா, முதித்தாää உபேக்ஷா ஆகியன பிரதிபலிக்கப்படுகின்றன. தேசிய கொடி ளு.டு.ளு 693-1985 ஆம் இலக்க இலங்கை தரநியம தகவுதிறன்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம்இ இலங்கை சுதந்திர சட்டம்இ 1947
தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம்இ தேசிய கொடி - 1951

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-09-09 14:17:30~ சேவையக நேரம்: 2024-11-29 11:09:11