லங்கா தேசிய சங்கம்
1919 டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி லங்கா தேசிய சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டது திரு.பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களாகும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பணிகளில் குறிப்பிடத்தக்க பணியை நிறைவேற்றுவதற்கு அச்சங்கத்திற்கு முடிந்தது. சங்கத்தின் நோக்கமானது பொது தேசிய அமைப்பாக இயங்குவதாகும்.
1920 மெனிங் சீர்த்திருத்தத்தின் கீழ் கொழும்பில் இருந்து தனியான ஆசனமொன்றை பொன்னம்பலம் அருணாச்சலம் தலைமையிலான தமிழ் தலைவர்கள் கோரியிருப்பதும்ää அதற்கு பெரும்பான்மையான சிங்களத் தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்தமையும் காரணமாக திரு.பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் லங்கா தேசிய சங்கத்தில் இருந்து விலகினார். சங்கத்தின் வலிமை குறைவதற்கு இது பெருமளவில் காரணமாக அமைந்தது. அதுபோல் சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் இருந்த நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஓரளவு பழுதடைவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்தது.
கீழ்நாட்டு சிங்களவர்களிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்பு இல்லாமல் போகுதல்ää ஏ.ஈ.குணசிங்க 1929 இல் சங்கத்தில் இருந்து விலகுதல் மற்றும் டொனமூர் திட்டம் பற்றி ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக ஈ.டபிள்யு.பெரேரா உள்ளிட்ட தரப்பு விலகியமையும் சங்கம் பலவீனமடைவதற்கு காரணமாக அமைந்தது.தேசிய ஆவணக்காப்பகம்இ60‍ /39இ1918.12.13இ லங்கா தேசிய சங்கத்தின் முதலாவது கூட்டம்.

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-07 02:56:35