தொழிலாளர் இயக்கம்
1891 இல் விதிக்கப்பட்ட ரூபா 2.00 வருடாந்த உடல்வரி செலுத்தாத வயதுவந்த ஆண்களுக்கு ஆறு நாட்கள் வீதிகளில் வேலை செய்வதற்கு நேரிட்டமைக்கு எதிராக இளைஞர் லங்கா சங்கம் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது. அதன் அங்கத்தர் ஒருவரான ஏ.ஈ.குணசிங்க அவர்கள் கொழும்பு நகரில் வீதிகளில் வேலைசெய்வதற்கு முன்வந்த தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கினார்.
நான்கு வருடங்கள் பாதைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலைமையை புரிந்துகொண்ட அவர் அதற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி லங்கா தொழிலாளர் சம்மேளனத்தில் இணைந்தார். ஆந்த அமைப்பின் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்படாத காரணத்தினால் விக்டர் கொரயாவின் தலைமையில் 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி லங்கா தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டதடன் அதன் உப தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் திரு.குணசிங்க ஆவார்.

1923 இல் மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு தலைமைதாங்கி நகர மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பொருளாதாரää அரசியல்ää சமூகää கலாசார மற்றும் கல்விசார் உரிமைகளை பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய லங்கா தொழிலாளர் சங்கம் மற்றும் அதன் தலைவரான ஏ.ஈ.குணசிங்க அவர்கள் தனது வாழ்க்கையை முழுமையாக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக அர்ப்பணித்த முதலாவது இலங்கையரும் ஆவார்.
ஆயிரத்தி தொல்லாயிரத்தி இருபதாம் முற்பகுதியில் குணசிங்க தொழிலாளர்களுக்காக போராடிய காரணத்தினால் பலர் தொழிலாளர் இயக்கத்துடன் கவர்ந்து இணைந்தனர். 1927 இல் டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்து குணசிங்க அவர்கள் கூறியது “வாக்கு அதிகாரத்திற்கான தகைமைகள் தயாரிக்கப்பட்டிருப்பது இத்தீவில் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு அது இல்லாதுப் போகும் விதத்திலாகும்.... தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மந்திரி சபை மூலம் பயனுள்ள எதையும் செய்யாமல் இருப்பது புதுமையல்ல. பால்நிலைää சாதிää சமயம் அல்லது குலம் பற்றிய எந்தவொரு வேறுபாடுமின்றி சர்வஜன வயதுவந்த வாக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என லங்கா தொழிலாளர் சங்கம் கடுமையாக கூறியது.”தேசிய ஆவணக்காப்பகம்இ தொழிலாளர் குரல், 1928, ஏ.ஈ.குணசிங்க மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பு

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-05 04:24:08