100 நாள் பயங்கரம்
1815இல் கண்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 100 ஆண்டுகளை 1915இல் ப10ர்த்தி செய்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் வெளிப்படும் வேளையில்ää 1915இன் கலவரத்தை இனக்குழுக்களுக்கிடையிலான மோதலாக அறிவித்து ஆளுநர் ரொபர்ட் ஷார்மஸ் சிங்கள சமூகத்தின் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகித்தார். 1915 ய10ன் மாதம் 2ஆந் திகதி இயற்றப்பட்ட இராணுவச் சட்டத்தின் படி வழக்கு விசாரணையின்றி அல்லது விளக்கம் கோரலின்றி கலவரத்துடன் தொடர்புடைய அனைவரையும் வெடி வைத்துக் கொள்வதற்கு பொலீஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
கலவரத்தின் முக்கிய நிகழ்வாகää கேப்டன் எட்வார்ட் ஹென்ரியால் பெட்ரியாரிஸ் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம். கொழும்பு நகர காவல்படை வீரரான (ஊழடழஅடிழ வுழறn புரயசன) இவர்ää அதில் இணைந்த முதல் சிங்களவர் ஆவார். நிதான இயக்கத்தின் தீவிர உறுப்பினர் எனற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுää 1915 ய10லை மாதம் 07 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பெட்ரிடாஸின் மரணம் இலங்கை சுதந்திர இயக்கத்தின் ஒரு திருப்புமனையாக அமைந்தது.
ஆங்கிலேயாரால் கலவரத்தின் போதுää டீ.எஸ். சேனாநாயக்கää எப்.ஆர். சேனாநாயக்கää ஜோன் த சில்வாää எட்வின் விஜேரத்னää டி.ஈ. த சில்வாää எப்.எச். டயஸ் பண்டாரநாயக எச். அமரசூரிய மற்றும் ஏ.எச்.ஈ. மொலமூர் போன்ற முன்னணிவகித்த சிங்கள தலைவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
‘கோட்டையின் சிங்கம் எனப் பெயர் பெற்ற திரு. ஈ.டபிள்ய10. பெரேரா அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கத்திற்கு முறையிட தனது காலணியில் மனுவை மறைத்து பிரித்தானிய சென்றார்.  சேர். பொன்னம்பலம் இராமநாதன்ää டி.பி. ஜயதிலக்க ஆகியோரும் முறைப்பாடு செய்தவர்களில் அடங்குகின்றனர். அவர்களின் முயற்சியால் ஆளுநர் சார்மஸை பிரித்தானியாவுக்கு திரும்ப அழைக்க வழிவகுத்ததுடன் பயங்கரத்தின் நூறு நாட்களும் முடிவுக்கு வந்தது.


தேசிய சுவடிகள் காப்பகம், 65ஃ229. நிதான இயக்கம் பற்றிய இரகசியப் பொலிஸ் அறிக்கை, 1915 ஆகஸ்ட் 07.
தேசிய சுவடிகள் காப்பகம் ஹென்ரி பெட்ரிஸின் நினைவஞ்சலி. 1922 ய10ன் 04.
தேசிய சுவடிகள் காப்பகம ஜனவரி-டிசெம்பர் 1936

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-05 04:26:30