1818 இன் சுதந்திரப் போராட்டம்
கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர்ää பிரித்தானிய அரசாங்கத்திற்கும் கண்டித் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதுடன் அதிருப்தியும் வளர்ந்தது. 1817இல் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் கண்டி முழுவதும் பரவத் தொடங்கியது.
கிளர்ச்சியின் இரண்டு முக்கிய தலைவர்களான கப்பெட்டிபொல மற்றும் பிலிமதலாவ ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர். லண்டனில் உள்ள காலனித்துவ செயலகத்திற்கு ஆளுநர் பிரவுன்ரிங் எழுதிய கடிதம் பெருமையுடன் நினைவு கூறப்படுகிறது.
கிளர்ச்சியின் முக்கிய பங்கு புத்தரின் புனிப் பல்லுக்கு உரித்தானது. கண்டியின் முக்கிய தலைவரான மதுகல்லாவை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்த சமயத்தில்ää அந்தக் காட்டில் சந்தேகத்திற்கிடமான பிக்கு ஒருவர் இருந்ததாக கிராம மக்கள் ஆங்கிலேயர்களிடம் கூறியதாக அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பிக்கு அஸ்கிரி பீடத்தைச் சேர்ந்த அனுநாயக்க வாரியபொல சுமங்கல தேரர் என்பது பின்னர் தெரியவந்தது. 1818 மே மாதத்தில் தளதா மாளிகையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனிதப் பல் அந்த தேரர் வசம் இருந்துள்ளது.இந்தக் கடிதத்தில்ää புத்தரின் புனிதப் பல் தன் கைகளில் சிக்கியதால் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது என பிரவுன்ரிக் கூற முயன்றார். புத்தரின் புனித் பல் தமக்குக் கிடைக்கப்பெற்றதானது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிபணிந்ததன் அடையாளம் என்று அவர் நம்புகிறார். ஆனால்ää மிருகத்தனமான அடக்குமுறையே கிளர்ச்சியின் முடிவுக்குக் காரணம் என தெளிவாகிறது.
1818 ஜனவரி மாதம் 10 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம்ää 19 மக்கள் தலைவர்கள் அரச துரோகிகள் என ஆளுநர் ரொபர்ட் பிரவுன்ரிக்கினால் அதிகாரப10ர்வமாக பெயரிடப்பட்டதோடுää அந்தக் கூற்று சுமார் 200 வருடங்களின் பின்னர் 2016 டிசெம்பர் மாதம் 21 ஆந் திகதி 1998ஃ25 ஆம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.தேசிய சுவடிகள் காப்பம்ää 5ஃ10ää ஆளுநர் பிரவுன்ரிங் லண்டனில் உள்ள காலனித்துவ செயலகத்துக்கு அனுப்பிய 1819.01.08 ஆந் திகதி எழுதிய கடிதம்.