அநாகரிக தர்மபாலவின் நாட்குறிப்பிலிருந்து ஒரு சில குறிப்பு
1864இல் பிறந்த டேவிட் ஹேவாவிதாரண எனும் அநாகரிக தர்மபால இலங்கை சுதந்திரப் போராட்டத்திலும், அமைதி இயக்கத்திலும் ஒரு மாபெரும் வீரராக திகழ்ந்தார். இவர் 1891இல் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கும்ää மகா போதி சங்கத்தை நிறுவுவதற்கும் இந்தியாவின் கல்கத்தாவுக்குச் சென்றார்.
இவரால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள பௌத்தயா பத்திரிகை, 1915இல் இராணுவச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டது. அவரை இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முடியாதவாறு ஆறு வருடங்கள் கல்கத்தா காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தார். இலங்கையை கட்டுப்படுத்தும் வரை எக்காரணம் கொண்டும் அவரை இலங்கைக்கு வர அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர் வில்லியம் மானிங் அறிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டுக்காவலில் இருந்த காலப்பகுதியில் சகோதரரான எட்மன் ஹேவாவிதாரண மரணித்து விட்டதாக அனுப்பிய தந்தி தொடர்பில் 1915 நவம்பர் 20 இல் அவரது நாட்குறிப்பில் பதிந்துள்ள, 1915இன் கலவரத்தில் கைது செய்யப்பட்டு சகோதரன் கொடூரமாக நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய சுவடிகள் காப்பகம், 497/23, அநாகரிக தர்மபாலவின் நாட்குறிப்பு, 1915