1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு
1924 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த மெனிங் டொவென்ஷெயர் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கும் நோக்கில் இந்த டொனமூர் அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த டொனமூர் அறிக்கை 20 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சி விவகாரங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த ஒரு அரச ஆவணமாக கருதப்படுகின்றது. அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்தியதன் பலனாக இலங்கையில் ஜனநாயக கோட்பாட்டு அடிப்படையில் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டது.
சர்வசன வாக்குரிமை, இனப் பிரதிநிதித்துவ ஒழிப்புää பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம், மக்கள் பேரவைää நிறைவேற்று முறைää அமைச்சரவை தாபிப்பு முதலிய விஷேட அம்சங்கள் அடங்கலாக மிகவும் சிறந்த முற்போக்கு முன்மொழிவுகள் டொனமூர் அரசியலமைப்பில் உள்ளடங்கியிருந்தன. மக்கள் பேரவைக் கூட்டம் 1931 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி நடத்தப்பட்டுள்ளது.  
ஆணைக்குழுவின் முன்னிலையில் ‘பெண்களின் வாக்குரிமைக்கான சங்கத்தின்’ எக்னெஸ் த சில்வா அடங்கலாக சங்கத்தின் உறுப்பினர்கள் அளித்த சாட்சியத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம், பெண்களுக்கு வாக்குரிமை அவசியம் என எக்னஸ் த சில்வா, டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியம்இ 1927, தொகுதி 4
தேசிய சுவடிகள் கூட்டுத்தானம், உத்தியோகபூர்வ அறிக்கை,1931.07.07, அரச சபை

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-12-02 10:02:20~ சேவையக நேரம்: 2025-01-02 22:19:14