ப்ரஸ்கேர்ல்ட் அவர்களின் வருகை
மார்க் அந்தனீ ப்ரஸ்கேர்ல்ட் 1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோட்ட நிருவாகியாக இலங்கைக்கு வந்தார். தோட்ட உரிமையாளர்கள்ää தொழிலானர்களை கவனித்த விதத்தையும் மற்றும் பிள்ளைகளையும் பெண்களையும் கவனித்த கொடூரமான விதத்தையும் அவர் கண்கூடாகக்கண்டார். நாளாந்தம் வேலைசெய்ய வேண்டிய காலத்தை 12 மணித்தியாலங்கள் வரை நீடித்ததை அவர் எதிர்த்தார். ஆவர் 1936 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜ கட்சியில் இணைந்தார்.
1937 ஆம் ஆண்டளவில் ப்ரஸ்கேர்ல்ட் அவர்களின் நடத்தைகளும் செயற்பாடுகளும் பிரித்தானியர்களுக்கு பெரும் தடையாக இருந்ததால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆளுநர் சேர் எட்வெட் ஸ்டப்ஸ் என்பவரினால் உத்தரவிடப்பட்டது. அதற்கு எதிராக இந்த நாட்டில் முதலாவது தொழிலாளர் அரசியல் எதிர்ப்பு ஆரம்பமாகியது.
இந்த சம்பவத்தின் பின்னர் ஸ்டப்ஸ் ஆளுநருக்கு அவரின் பதவியில் இருந்து ஓய்வுபெற நேர்ந்தது. அவருக்கு பதிலாக வந்த ஆளுநர் சேர் என்ட்ரு கெல்டிகொட் என்பவர்ää வெளியேற்ற வேண்டும் என்ற அந்த உத்தரவில் இருந்து எழுந்த இடைக்காலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். ஊள்நாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சேர். டீ.பீ. ஜயதிலக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்து தான் அந்த உத்தரவை அனுமதிக்கவில்லை என்பதை நன்றாக உறுதிப்படுத்தியிருந்தும்ää ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் பேன்ஸ் என்பவரை விடுதலை செய்தமை அரச சபையின் கடும் விமர்சனத்திற்குட்பட்டது. அரச பையின் உள்நாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சருக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணையும் மற்றும் பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து விலக்கும் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டன. தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம், 108.20/2, ப்ரஸ்கேர்ட்ல் ஆணைக்குழுஇ 1937